நாமக்கல்லில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா!
Namakkal King 24x7 |5 Sep 2024 5:59 AM GMT
நாமக்கல் மணிக்கூண்டு அருகில் வ.உ.சியின் திருவுருவப் படத்திற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், கப்பலோட்டிய தமிழன் என மக்களால் அன்போடு அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம், பாவேந்தர் பாரதி தாசன் பேரவை, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை நிர்வாகிகள் இணைந்து நாமக்கல் மணிக்கூண்டு அருகில் வ.உ.சியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக தங்கம் மருத்துவமனை மருத்துவர் இரா.குழந்தைவேல் கலந்து கொண்டு வ.உ.சியின் தியாகங்கள் தேசத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஒரே ஒரு தேசிய தலைவர், நாட்டு விடுதலைக்காக தன் சொத்துக்களை குடும்பத்தை இழந்து கோவை சிறையிலே செக்கிழுத்த செம்மல் ஐயாவின் தியாகத்தை அர்ப்பணிப்பை இளைய தலைமுறைக்கு கற்பிப்போம் என அவருக்கு புகழாரம் சூட்டினார். விழாவில் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க மண்டல செயலாளர் பசுமை மா.தில்லை சிவக்குமார், மாவட்ட தலைவர் வெங்கட குமார், துணைத் தலைவர் தமிழ்ச் செம்மல் அரசுபரமேஸ்வரன் , இணைச் செயலாளர் முத்து சிவஞானம் பிள்ளை, திலக், மாவட்ட மகளிர் அணி செயலாளர் இராதிகா மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் பேரவை தலைவர் கருப்பணன் , மதியழகன், செயலாளர் ரகோத்தமன், துணைச் செயலாளர் மருதமுத்து, பொருளாளர் ஆசிரியர் ஆறுமுகம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை தலைவர் சுரேஸ், வழக்கறிஞர் நாகராஜன் , குணசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.
Next Story