கரூர் மாவட்டத்தில் ”உயர்வுக்குப் படி” திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல்.

கரூர் மாவட்டத்தில் ”உயர்வுக்குப் படி” திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல்.
கரூர் மாவட்டத்தில் ”உயர்வுக்குப் படி” திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ”உயர்வுக்குப் படி 2024” முகாம் முன் திட்டமிடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இன்றைய தினம் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் கரூர் மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24ம் கல்வியாண்டில் உயர்கல்வி தொடராத 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதற்கு ஏதுவாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ”உயர்வுக்குப் படி 2024” முகாம் கரூர் மற்றும் குளித்தலை ஆகிய இடங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது எனவும், இம்முகாமின் நோக்கம் உயர்கல்வி தொடராத மாணக்கர்களை உயர்கல்வியில் சேர்ந்து எதிர்காலத்தில் அவர்கள் பயின்ற துறையில் சிறந்த வல்லுநராக உருவாக்குவதே ஆகும் என்ன மாவட்ட ஆட்சியர் விளக்கி கூறினார் . மேலும், உயர்கல்வியில் சேராத மாணவர்களை மேற்படிப்பில் சேர்வதற்கு பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து, அனைத்து அரசுத்துறைகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார். கரூர் வருவாய் வட்டத்தில் ”உயர்வுக்குப் படி 2024” முகாம்கள் வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 19-ஆகிய தேதிகளிலும், குளித்தலை வருவாய் வட்டத்தில் செப்டம்பர் 13 மற்றும்24-ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Next Story