ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் ஆசிரியர் தின விழா.
Andippatti King 24x7 |5 Sep 2024 9:11 AM GMT
பள்ளியின் செயலர் மாத்யூ ஜோயல் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் ஆசிரியர் தின விழா. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைவர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் தமயந்தி முன்னிலை வகித்தார் .பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்று பேசி சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தேசிய விருது பெற்ற ஓய்வு ஆசிரியர் தில்லை நடராஜன் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி விழா சிறப்புரையாற்றினார். பள்ளியின் செயலர் மாத்யூ ஜோயல் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .மாணவர்களும் ஆசிரியர் தின விழாவில் சிறப்புரையாற்றினார்கள். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா ,கவிதா, பாண்டிச் செல்வி, ராகினி, ,திவ்யா ஆகியோர் செய்து இருந்தனர்.
Next Story