திமுக தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும்- எம்எல்ஏ வேண்டுகோள்
Maduranthakam King 24x7 |5 Sep 2024 9:21 AM GMT
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற தொண்டர்கள் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் - க. சுந்தர் எம்எல்ஏ, நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் தொண்டர்களுக்கு வேண்டுகோள்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் அமோக வெற்றி பெறுவது குறித்தும், கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், திராவிட மாடலா ஆட்சியின் சிறப்புகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் சுவர் விளம்பரங்கள் வரவேற்பு குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் தனசேகர், ஆறுமுகம், தமிழரசன் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் தினேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
Next Story