கடம்பன்குறிச்சியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வீட்டில் கும்பாபிஷேக விழா.
Karur King 24x7 |5 Sep 2024 9:43 AM GMT
கடம்பன்குறிச்சியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வீட்டில் கும்பாபிஷேக விழா.
கடம்பன்குறிச்சியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வீட்டில் கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, நஞ்சை கடம்பன்குறிச்சி கிராமத்தில் உள்ள வடுகர் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வீட்டில், இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இன்று அதிகாலை மங்கள இசையுடன் துவங்கிய இந்த கும்பாபிஷேக விழாவில், விநாயகர் வழிபாடு, வேதபாராயணம், இரண்டாம்கால யாக பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று, மகா தீபாதாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை விமர்சையாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து மூலவராக அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு மகா தீபாரணையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் கோ பூஜையும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற கடம்பகுறிச்சி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் கும்பாபிஷேக விழா கமிட்டியின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் கும்பாபிஷேகத்திற்காக கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி சார்பில் ரூபாய் 50,000 வழங்கப்பட்டது.
Next Story