முதனை கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா

ஒன்றிய கல்வி குழு தலைவர் திறந்து வைத்தார்
விருத்தாசலம், செப்.6- விருத்தாசலம் அடுத்த முதனை காலனி பகுதியில் ரேஷன் கடை இல்லாததால் அப்பகுதி மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விருத்தகிரிகுப்பம் சென்று அங்கு இயங்கி வந்த ரேஷன் கடையில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்தனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் செல்வராசு முதனை காலனியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதன் பேரில் முதனை காலனியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க அதிகாரிகள் அமர்நாத், திருமுருகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சி செயலாளர் முத்தமிழ்செல்வன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒன்றிய கல்விக் குழு தலைவர் கோட்டேரி சுரேஷ் ரிப்பன் வெட்டி பகுதிநேர ரேஷன் கடையை திறந்து வைத்தார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் புனிதவள்ளி, பிரியங்கா, திமுக நிர்வாகிகள் பன்னீர்செல்வம், வேல்முருகன், அரங்கநாதன், லட்சுமணன், கொளஞ்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story