புளியம்பட்டி அருகே பனியன் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
Bhavanisagar King 24x7 |5 Sep 2024 11:06 AM GMT
புளியம்பட்டி அருகே பனியன் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
புளியம்பட்டி அருகே பனியன் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி அடுத்த செண்பகப்பதூர் தோட்ட சாலை சேர்ந்தவர் முத்துசாமி கவுண்டர் மகன் ராஜேந்திரன் வயது 49 இவரது மனைவி பிரியா 37 ராஜேந்திரன் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் கட்டிங் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. ராஜேந்திரன் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் மனைவி பிரியாவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார் அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறியுள்ளார் இதனால் மனவேதனை அடைந்த ராஜேந்திரன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு கொண்டார் பின்னர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிரியா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவர் ராஜேந்திரனை மீட்டு ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ராஜேந்திரன் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது பின்னர் இது குறித்து அவரது மனைவி பிரியா புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story