வாணியம்பாடி அருகே சாலை வசதி இல்லாமல் உயிரிழந்த முதியவர்
Tirupathur King 24x7 |5 Sep 2024 11:34 AM GMT
வாணியம்பாடி அருகே முறையான சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில் இருந்து நடந்தே மருத்துவமனைக்கு சென்ற முதியவர், மருந்தகத்தின் முன் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே முறையான சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில் இருந்து நடந்தே மருத்துவமனைக்கு சென்ற முதியவர், மருந்தகத்தின் முன் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை மலை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (65), மனைவியை இழந்து மலைகிராமத்தில் தனிமையில் வசித்து வரும் நிலையில், இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, இதனால் முனுசாமி முறையான சாலை வசதியே இல்லாத நெக்னாமலை கிராமத்தில் இருந்து மலை கிராம மக்களே அமைத்த மண்சாலையில் 7 கிலோ மீட்டர் நடந்தே வந்து, ஆலங்காயம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று பின்னர் மருந்து மாத்திரைகள் வாங்க அதே பகுதியில் இருந்த தனியார் மருந்தகத்திற்கு சென்றுள்ளார், அப்பொழுது முதியவர் முனுசாமி திடீரென உடல் சோர்வாகி மயங்கி விழுந்துள்ளார், உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.. அதனை தொடர்ந்து முனிசாமியின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.. அதனை தொடர்ந்து, முனுசாமியின் உடலை அவரது உறவினர்கள் நெக்னாமலை அடிவாரத்தில் இருந்து சின்னதிரை நடிகர் பாலா அளித்த ஆம்புலன்ஸ் மூலம் மலை கிராமத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், முனுசாமி மயங்கி விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் பல ஆண்டுகாலமாக நெக்னாமலை கிராமத்தில் சாலை வசதி அமைத்துதரக்கோரி மலைகிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பலர் மலை கிராமத்தில் ஆய்வு செய்தும் இதுவரையில் மலைகிராமத்தில் சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்க்கொள்ளவில்லையெனவும், அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்..
Next Story