நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்
Bhavanisagar King 24x7 |5 Sep 2024 11:48 AM GMT
நம்பியூர் தாலுக்கா அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்
நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவிற்கு உட்பட்ட கூடக்கரை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு 53 நபர்களுக்கு பொதுப்பட்ட வழங்கப்பட்டது 2018 ஆம் ஆண்டு மீண்டும் 118 நபர்களுக்கு அதே பகுதியில் மீண்டும் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது இதில் 2008இல் 53 நபர்கள் கொடுத்த இலவச வீட்டுமனை பட்டா விற்கும் அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு 118 நபர்களுக்கு கொடுத்த இலவச வீட்டு மனை பட்டாக்களுக்கும் இதுவரை இடம் அளவீடு செய்து தராமல் அதிகாரிகள் இழுத்து அடித்து வந்துள்ளனர் இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் நடத்தினர் இதில் மாவட்ட கலெக்டர் கோட்டாட்சியர் வட்டாட்சியர் என பல்வேறு தரப்பினரை சந்தித்து மனுக்களை வழங்கினார் அதிலும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை இது குறித்து கூடக்கரை ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது ஆனால் அது குறித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை இதனால் போட கரை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் நம்பர் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் நம்பி கோபி ரோட்டில் வந்து தர்ணாவில் ஈடுபட்டனர் பின்னர் நம்பியூர் தாசில்தார் ஜாகிர் உசேன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதில் உரிய நடவடிக்கை எடுத்து உங்களுக்கு நிலம் அளவீடு செய்து தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கைவிட்டு களைந்து சென்றனர்
Next Story