மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு முறை கேடு உள்ள கடைகளுக்கு அபராதம் விதித்துகடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை
Periyakulam King 24x7 |5 Sep 2024 12:02 PM GMT
ஆய்வு
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நியாய விலை கடையில் அதிக அளவில் முறைகேடு நடப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு முறை கேடு உள்ள கடைகளுக்கு அபராதம் விதித்துகடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் வழங்குவதில்லை என பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். மேலும் நியாய விலை கடையில் பணி செய்யும் ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு, வழங்கக்கூடிய பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும் மேலும் ஒரு சில கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையானவற்றை நியாய விலைக் கடைகளில் இருந்து பொருட்களை அதிகளவில் பெற்றுச் செல்வதாலும், இதனால் ஏழை எளிய குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக ரேஷன் பொருட்கள் வழங்குவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த புகார் என்னை தொடர்ந்து இன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா பெரியகுளம் மற்றும் அது சுற்று வட்டார பகுதியில் உள்ள நியாயவலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த ஆய்வின் போது நியாய விலை கடையில் முறையாக கணக்குகள், மற்றும் கடையில் உள்ள இருப்புகள், ஒரு சில கடைகளில் சரியாக இல்லாததாலும், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அபராதம் விதித்தும் மற்றும் இதுபோன்றுஇனிமேல் தவறுகள் ஏதும்நேர்ந்தால்உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுதுசென்றார்.
Next Story