கொலை வழக்கில் குற்றவாளியை விரைவாக கைது செய்த காவலர்களுக்கு எஸ் பி பாராட்டி பரிசு வழங்கினார்.

கொலை வழக்கில் குற்றவாளியை விரைவாக கைது செய்த காவலர்களுக்கு எஸ் பி பாராட்டி பரிசு வழங்கினார்.
கொலை வழக்கில் குற்றவாளியை விரைவாக கைது செய்த காவலர்களுக்கு எஸ் பி பாராட்டி பரிசு வழங்கினார். கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வெங்கக்கல்பட்டி பகுதியில், ஆகஸ்ட் 12ஆம் தேதி புலியூரை சேர்ந்த முத்தாயி வயது 57 என்று மூதாட்டி சந்தேகத்திற்கு இடமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுபடி, கரூர் காவல்துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார்,சிறப்பு உதவி ஆய்வாளர் எழிலரசன், தலைமை காவலர்கள் அன்பு, செல்வன், முதல் நிலை காவலர் முருகன், செல்லப்பாண்டி ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைத்து, கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். சம்பவம் நடந்த இடத்தின் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொலை குற்றத்தில் ஈடுபட்ட, கரூர் மாவட்டம், குளித்தலை, கள்ளை பகுதியைச் சேர்ந்த வேலு வயது 37 என்பவரை கைது செய்து, கொலையின் போது பயன்படுத்திய டூவீலர் ஆகியவை பறிமுதல் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கொலையாளியை விரைவாக கைது செய்த தனிப்படையினருக்கு, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்தான் அப்துல்லா பாராட்டி பரிந்துரை செய்ததன் பேரில், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டி வெகுமதி வழங்கினார். அந்த வெகுமதியை இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மேற்கண்ட தனிப்படையினரை அழைத்து, வழங்கி பாராட்டினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா.
Next Story