எஸ்.வி.நகரம் ராகவேந்திர மடத்தில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சிறுவன் கைது.

X
ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் ராகவேந்திரா உத்தர மடத்தில் செவ்வாய்கிழமை இரவு உண்டியலை உடைத்து பணம் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து எஸ்.வி.நகரம் மடத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் புகார் கொடுத்தார். இதன் பேரில் ஆரணிகிராமிய போலீிஸார் அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்ததில் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரிய வந்தது. இதனால் ஆரணி கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து 16 வயது சிறுவனை கைது செய்து கடலூர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
Next Story

