நாமக்கல் தெற்கு திமுக நகர உறுப்பினர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் !
Namakkal King 24x7 |5 Sep 2024 1:24 PM GMT
நாமக்கல் தெற்கு நகர திமுக சார்பாக நகர மற்றும் வார்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் ராணா ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் தெற்கு நகர கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகிற செப்டம்பர் 10ந்தேதி நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுவதை முன்னிட்டு நாமக்கல் தெற்கு நகர திமுக சார்பாக நகர மற்றும் வார்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் ராணா ஆர்.ஆனந்த் தலைமையில் தெற்கு நகர அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் பொது உறுப்பினர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும், கழக கொடிக்கம்பங்கள் புதுப்பிப்பது குறித்தும், மேலும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவில் கழக உறுப்பினர்களின் குடும்பத்தில் கல்லூரி படிப்பு பயின்று வரும் மாணவ- மாணவிகளுக்கு எண்ணற்ற பல உதவிகளை செய்து வரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என் இராஜேஷ்குமார்.M.P. அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.இதில் தெற்கு நகர துணை செயலாளர்கள் புவனேஸ்வரன் சரோஜா குட்டி (எ)செல்வகுமார்,வார்டு செயலாளர்கள் மூர்த்தி,சேகர், பாஸ்கரன்,மாறன், டாக்டர் விஜய் ஆனந்த்,தனசேகரன், சரவணன், மோகன்ராஜ், ஹரி, செல்வராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கடலரசன் கார்த்தி, நகர இளைஞரணி ராஜேஷ், நகர ஐடி விங் மன்னன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story