வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி விளையாட்டு தினவிழா
Rasipuram King 24x7 |5 Sep 2024 2:06 PM GMT
வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி விளையாட்டு தினவிழா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தின விழா வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கான விழாவில் பள்ளியின் நிறுவனர் முனைவர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்து தேசிய கொடியினை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பள்ளித் தலைவர் ஜி.வெற்றி செல்வன், திருச்செங்கோடு ஜி குளோபல் பள்ளியின் தலைமை நிர்வாகி ரோஷினி வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாநில, மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்த மாணவர்கள் விளையாட்டு மைதானத்தை சுற்றி தொடர் ஓட்டமாக ஏந்தி வந்த ஜோதியினை ஏற்றி வைத்தனர். பின்னர் தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகள், தனிநபர் விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. மேலும் கராத்தே, ஜிம்னாஸ்டிக், ஏரோபிக்ஸ் போன்றவற்றில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர். இதில் பேசிய பள்ளியின் நிறுவனர் எஸ்.குணசேகரன், அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்களின் சேவையை என்றும் மாணவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அது தான் அவர்களுக்கு மாணவர்களாகிய நீங்கள் வழங்கும் அங்கீகாரம். பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் தங்களது திறன்களை வெளிப்படுத்த வேண்டும். இது போன்ற விளையாட்டு வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என வலியுறுத்திப் பேசினார் இவ்விழாவில் பள்ளியின் முதல்வர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
Next Story