உடுமலையில் தக்காளி விலை உயர்வு
Udumalaipettai King 24x7 |5 Sep 2024 2:36 PM GMT
விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி ஆண்டு முழுவதும் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர் இந்த நிலையில் பருவ மழை சீதோசன நிலை காரணமாக தக்காளி அறுவடையின் போது தக்காளி பழங்கள் பாதிக்கப்பட்டன மேலும் திண்டுக்கல் கோவை பொள்ளாச்சி திருப்பூர் தாராபுரம் பகுதியில் இருந்து தக்காளி வரத்து அதிகமாக இருந்த காரணத்தால் கடந்த சில வாரத்தில் 14 கிலோ பட்டி ரூ 100 முதல் ரூ.150 வரை விற்பனையானதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது இதனால் ஓரு சில இடங்களில தக்காளி பழங்களை பறிக்காமல் ஒரு சில இடங்களில் மாடுகளை மேய விட்டும் மற்றும் சாலை ஓரங்களில் கொட்டி வந்தனர். இந்த நிலையில் தற்போது இன்று தக்காளி வரத்து அதிகமானாலும் 14 கிலோ பெட்டி ரூ 230 முதல் ரூ.260 வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்சமயம் மற்ற மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து சீராக உள்ளதால் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story