மதுராந்தகம் தனியார்மெட்ரிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டுவழிபாடு
Maduranthakam King 24x7 |5 Sep 2024 3:02 PM GMT
மதுராந்தகம் தனியார்மெட்ரிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டுவழிபாடு நடத்தினர் இதில் ஆயிரம் மாணவ மாணவிகள் தோப்புக்கரணம் போட்டு வழிபாடு
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்தில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் வரைந்த விநாயகர் படத்தை வைத்து விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப் பட்டது.விநாயகருக்கு எருக்க மாலை அணிவித்து இப்பள்ளியில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வரிசையாக நின்று தங்கள் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியரும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு விநாயகருக்கு பூஜை செய்து தோப்புக்கரணம் போட்டு வழிபாட்டனர்
Next Story