அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு

X
செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஊராட்சி ஒன்றியம் மடையம்பாக்கம், அம்மனூர், ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நலன் கருதி தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ். பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதி விசிக கட்சி எம்எல்ஏ பனையூர் மு.பாபு கலந்துகொண்டு புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் தசரதன், ஊராட்சி மன்ற தலைவர் இளவரசிஜனார்த்தனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

