விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தமிழக அரசுக்கு கோரிக்கை!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தமிழக அரசுக்கு கோரிக்கை!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். விநாயகர் சதுர்த்தி ஏழாம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசுகையில் தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் தன் எழுச்சியாக வீடுகள் மற்றும் தங்கள் பகுதிகளில் 15 லட்சம் சிலைகள் வைத்து கொண்டாட உள்ளதாகவும் திருப்பூரில் நான்காவது நாளும் கோவையில் ஐந்தாம் நாளும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உள்ளதாகவும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார் மற்ற மத பண்டிகைகள்  போல இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதோடு கொண்டாடவும் அழைப்பு விடுத்துள்ளோம். பழனியில் நடைபெற்ற முருகன் மாநாட்டுக்கு இந்து முன்னணிக்கு அழைப்பு இல்லை விநாயகர் சிலைகள் வைக்க அரசு தரப்பில் தடை போடும் பொழுது இந்துக்களின் மத்தியில் எழுச்சி உண்டாவதாகவும். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 1500 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடப்பட உள்ளதாகவும் திருப்பூரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்கிறார் எனவும் விநாயகர் சிலைகள் வைக்க சில பகுதிகள் போலீசார் மூலம் நெருக்கடி தரப்படுவதாகவும் இதனை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் உளவுத்துறை மூலம் திருப்பூரில் வாழும் வங்கதேசத்தினரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். நிகழ்வில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story