ஆண்டிபட்டி பகுதிகளில் இரண்டு இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி
Andippatti King 24x7 |5 Sep 2024 4:42 PM GMT
ஆண்டிபட்டி பகுதியில் வைகை அணை அருகே வைகை ஆற்று பாலம் பகுதியிலும், வருஷநாடு பகுதியில் மொட்டப்பாறை மூல வைகை ஆற்று தடுப்பணை பகுதியிலும்அனுமதி வழங்கப்பட்டுள்ளது
தேனி மாவட்டம்ஆண்டிபட்டி பகுதியில் 2 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் தேனி பகுதியில் அரண்மனைப்புதூா், வீரபாண்டி முல்லைப் பெரியாற்றிலும், பெரியகுளம் பகுதியில் பாலசுப்பிரமணியா் கோயில் அருகே வராக நதியிலும், உத்தமபாளையம் பகுதியில் ஞானம்மன்கோயில் அருகே முல்லைப் பெரியாற்றிலும், கம்பம் பகுதியில் சுருளிப்பட்டி சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றிலும், ஆண்டிபட்டி பகுதியில் வைகை அணை அருகே வைகை ஆற்று பாலம் பகுதியிலும், வருஷநாடு பகுதியில் மொட்டப்பாறை மூல வைகை ஆற்று தடுப்பணை பகுதியிலும், போடியில் புதூா் கொட்டகுடி ஆற்றிலும், சின்னமனூா் பகுதியில் மாா்கையன்கோட்டை முல்லைப் பெரியாற்றுப் பாலம் பகுதியிலும் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
Next Story