பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
Dindigul King 24x7 |5 Sep 2024 4:47 PM GMT
முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்
பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2024-25 கல்வியாண்டில் தொழிற்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பட்டப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் பயன்பெறும் வகையில் முன்னாள் படைவீரர்களின் பெண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.3000 வீதம் (ரூ.36,000/ஆண்டுக்கு) மற்றும் ஆண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.2,500 வீதம் (ரூ.30,000/ஆண்டுக்கு) என்ற வீதத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை முன்னாள் படைவீரர்கள் நேரடியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்திடலாம். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளம் www.ksb.gov.in என்ற முகவரியில் 30.11.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அனைத்து ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அதிக அளவு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும், என வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Next Story