விருத்தாசலம் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
Virudhachalam King 24x7 |5 Sep 2024 5:14 PM GMT
திரளான பக்தர்கள் தரிசனம்
விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த 3 ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை தனபூஜையுடன் தொடங்கி வாஸ்து சாந்தி அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், பிரவேச பலி, கலா கர்சனம் மகா தீபாரதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து 4 ந் தேதி இரண்டாம் காலியாக சாலை பூஜை மகாதிபாரதனையும், மூன்றாம் காலயாக பூஜை நடந்தது. இன்று 5 ந் தேதி காலை 7 மணிக்கு மேல் 4ம் காலயாக சாலை பூஜை, நாடி சந்தானம், உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று சரியாக காலை 10:30 மணிக்கு மேல் கடம் புறப்பாடு புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகமும், மகா தீபாரதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
Next Story