பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ் பி பாலமுருகன் கலைச்செல்வி இல்ல திருமண விழா

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ் பி பாலமுருகன் கலைச்செல்வி இல்ல திருமண விழா
என் ஆர் தனபாலன் நடத்தி வைத்தார்
விருத்தாசலம் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாலமுருகன் - கலைச்செல்வி இல்ல திருமண விழா விருத்தாசலத்தில் நடைபெற்றது. விருத்தாசலம் திருவிக நகரில் வசிக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், நாடார் உறவின்முறை பொருளாளருமான பாலமுருகன் நாடார் - கலைச்செல்வி தம்பதியரின் மகள் பவித்ரா என்ற மணமகளுக்கும், மதுரை மாவட்டம், ஏழுமலை, செல்லபாண்டியன் நாடார் - நாகராணி தம்பதியரின் மகன் வாசுதேவன் என்ற மணமகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இந்த திருமணம் நேற்று விருத்தாசலம் ஆனந்தா திருமண மஹாலில் நடந்தது. விழாவிற்கு நாடார் உறவின் முறை தலைவர் சபாபதிவேல் நாடார் தலைமை தாங்கினார். பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். மாநில துணைத்தலைவர் எஸ் எம் குருசாமி நாடார் வரவேற்றார். இதில் கடலூர் மாவட்ட தலைவர் குசலவ சாமி நாடார், ரோட்டரி சங்க தலைவர் அசோக் குமார், உறவின்முறை ஆலோசகர் கே கே டி பழமலை நாடார், நல்லி கருப்பசாமி நாடார், செயலாளர் எஸ் எம் மாரியப்பன் நாடார், நெய்வேலி டி ஆர் எம் ராஜமாரியம்மன், வி ராஜன், திட்டக்குடி வட்டார ஐக்கிய சங்க தலைவர் மாரிமுத்து நாடார், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் நவராஜ் சாம் சுரேஷ், திட்டக்குடி பச்சை பழம் நாடார் மற்றும் பூமணி, மகேந்திரன், ராஜ்குமார், கேசவன், பெரியமூர்த்தி, ஜெயச்சந்திரன், எம் கே ராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
Next Story