கோபால்நாயக்கர் நினைவு நாள் அனைத்து கட்சி நிர்வாகிகள் மரியாதை
Dindigul King 24x7 |5 Sep 2024 7:51 PM GMT
இந்திய சுதந்திர போராட்ட வீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கர் 223வது நினைவு நாளை முன்னிட்டு கோபலசமுத்திரம் கரையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மரியாதை
இந்திய விடுதலைக்காக தீபகற்ப கூட்டமைப்பை உருவாக்கி தென்னிந்திய புரட்சிப் படை தென்னிந்திய புரட்சிப்படை தலைவராக இருந்த விடுதலை போராட்ட வீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கர் 223 வது நினைவு நாள் செப்டம் 5ம் தேதி அனுசரிக்கப்படுகிறது திண்டுக்கல், கோபாலசமுத்திரக்கரையில் விருப்பாச்சி கோபால் நாயக்கர் தூக்கில் இடப்பட்ட இடத்தில் தமிழ்நாடு நாயுடு நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் சார்பாக வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் நடைபெற்ற விழாவில் அவரது திருவுருவ படத்திற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையிலான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், ஒன்றிய திமுக செயலாளர்கள் நெடுஞ்செழியன்,வெள்ளிமலை, நாயுடு நாயக்கர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதிமுக சார்பாக முன்னால் அமைச்சர்கள் திண்டுக்கல் சி சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் அமைப்புச் செயலாளர் மருதராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பிரேம்குமார், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன் மற்றும் பேரூர் கழக, கிளைக் கழக, பகுதி கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து தேவர் சமுதாய அனைத்து ஜாதி கூட்டமைப்பு சார்பாக பிரமலைக்கள்ளர் பேரவை செயலாளர் ஜெயபால் முக்குலத்தோர் சங்க மாவட்ட செயலாளர் அழகர் ஆகியோர் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு நாயுடு நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் சார்பாக இளங்கோவன் ஆனந்த் வினோத்குமார் பாலாஜி சுபாஷ் மோகன் அருண் கௌசல்யா உஷாராணி இந்திராணி கமலா உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story