பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஜாக்கிரதை! பாதுகாப்பு விதிகளை பின்பற்ற கலெக்டர் அறிவுரை

பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஜாக்கிரதை! பாதுகாப்பு விதிகளை பின்பற்ற கலெக்டர் அறிவுரை
பாதுகாப்பு விதிகளை பின்பற்ற கலெக்டர் அறிவுரை
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் எஸ்.பி., தினகரன், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, தொழிலக பாதுகாப்புத் துறை இணை இயக்குனர் சித்ரா முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில், மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளர்கள், அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி பட்டாசு தயாரிப்பது. பட்டாசு தயாரிப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் தீ விபத்து ஏற்பட்டால், எவ்வாறு தீ தடுப்பு பணிகளை மேற்கொள்வது. பட்டாசு வாங்கிச்செல்லும் கடை உரிமையாளர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக கொண்டு சென்று விற்பனை செய்வது குறித்தும் விளக்கப்பட்டது.கூட்டத்தில் கலெக்டர் பழனி பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில், பட்டாசு தயாரிக்கும் தொழிலில் பாதுகாப்பு அவசியம். விபத்துகள் ஏற்படுவதால், கவனமாக செயல்பட வேண்டும். பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், சட்டதிட்டங்களுக்குட்பட்டு பட்டாசு தயாரிக்க வேண்டும்.மனித உயிர் விலைமதிப்பற்றது என்பதால், தொழிற்சாலையில் எந்த விபத்தும் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளைக் கட்டாயம் கடைபிடித்திட வேண்டும். 18 வயதிற்கு கீழான தொழிலாளர்களை ஈடுபடுத்தக்கூடாது, உரிமத்துடன் மட்டும் உற்பத்தி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.
Next Story