அரசு பஸ் மோதி வாலிபர் பலி!
Pudukkottai King 24x7 |6 Sep 2024 2:48 AM GMT
விபத்து செய்திகள்
ஆலங்குடி: ஆலங்குடி அருகே உள்ள செரியார் ஜமீனை சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் வெங்கடேஷ்(26). இவர் இருசக்கர வாகனத்தில் கீரமங்கலம் சென்றார். பஸ் நிலையம் அருகே வந்தபோது, அறந்தாங்கியில் இருந்து கீரமங்கலம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story