ஆரணி அரிமா சங்கம் மற்றும் அமலராக்கனி பார்வையற்றோர் பள்ளி இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஆரணி செப் 6 ஆரணி அரிமா சங்கம் மற்றும் பத்யாவரம் அமலராக்கினி பார்வையற்ரோர் பள்ளி இணைந்து முதுகு தண்டுவட பாதிப்பு தினம் முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
ஆரணி அரிமா சங்கம் மற்றும் பத்யாவரம் அமலராக்கினி பார்வையற்ரோர் பள்ளி இணைந்து முதுகு தண்டுவட பாதிப்பு தினம் முன்னிட்டு வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர வாகனங்களில் பேரணியாக சென்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். இதில்அரிமா சங்கத் தலைவர் எம் மோசஸ் தலைமை தாங்கினார். ஆரணி நகர வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் எஸ் ராஜன் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக அரிமா சங்க மாவட்ட துணை ஆளுநர் வி பி உதயசூரியன் கலந்து கொண்டார். மேலும் அரிமா சங்க செயலாளர் ஏ.எம்.முருகானந்த், பொருளாளர் கே.ஆர். பரசுராமன், வணிகர் சங்க நிர்வாகிகள் எஸ்.டி.செல்வம், இ.சலீம்பேக், செங்கீரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story