காங்கேயம் ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் சார்பில் ஆசிரியர் தின விழா
Tiruppur King 24x7 |6 Sep 2024 2:58 AM GMT
காங்கேயம் ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் சார்பில் ஆசிரியர் தின விழா நால்ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது
காங்கேயம் சென்னிமலை சாலை நால்ரோட்டில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு காங்கேயம் ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.கே.செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆசிரியர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு முக்கியமானவர்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஆசிரியர்கள் பெற்றோர்களாகவும், நண்பர்களாகவும், குருவாகவும், தெய்வமாகவும் போன்ற பல நிலைகளில் வாழ்கின்றனர் என்றும் ஆசிரியர் தங்களது மனநலத்தையும், உடல் நலத்தையும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் ஆசிரியர்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்கு அற்புத வழிமுறைகள் என்ற புத்தகத்தையும் ஹார்ட் ஃபுல்னஸ் பயிற்சி ஏடுகளையும் நினைவு பரிசாக வழங்கினார். மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் ரேணுகா, ஸ்ரீராம் சந்துரு மெஷின் மேலாளர் முத்துக்குமார், பயிற்சி ஆசிரியர் ஜானகி, தன்னார்வலர் குழு ஒருங்கிணைப்பாளர் பிரேமா, 50 ஆசிரியர்கள் 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
Next Story