உடல் நலம் குன்றிய முதியவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை விசாரணை.
Karur King 24x7 |6 Sep 2024 4:53 AM GMT
உடல் நலம் குன்றிய முதியவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை விசாரணை.
உடல் நலம் குன்றிய முதியவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை விசாரணை. கரூர் மாவட்டம், ஆத்தூர், நத்தமேடு, சமத்துவபுரம், சோழியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் வயது 80. வயது மூப்பின் காரணமாக பல்வேறு நோய் தாக்கங்களுக்கு ஆளாகிய இருந்த இவர், தொடர்ந்து அதற்காக சிகிச்சை பெற்று வந்தும் அவரது உடல்நிலை சீராகவில்லை. இதனால், விரத்தியோடு வாழ்ந்து வந்த கருப்பண்ணன், செப்டம்பர் 3ஆம் தேதி இரவு 11 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை கருப்பண்ணனின் மனைவி உமா வயது 60 என்பவர் தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் , கருப்பண்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை விசாரணை செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story