ஆரணி அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா
Arani King 24x7 |6 Sep 2024 10:17 AM GMT
ஆரணி செ. 6 ஆரணி அரசு பள்ளியில் மாணவர்கள், வனத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி சேவூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது ஆரணி வனத்துறை அலுவலர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறை அதிகாரிகளும் ஆரணி நகராட்சி ஆணையாளர் சரவணன் முன்னிலையில் நகராட்சி பணியாளர்களும் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் இணைந்து சேவூர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்களுக்கு சால்வைகளை அணிவித்து இனிப்புகளை வழங்கி அவர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்னர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்புகளை வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆரணி வனத்துறை சார்பில் பள்ளி வளாகத்திலும் மரக்கன்றுகளை வனத்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் நகராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டனர். அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தினம் நினைவாக மரக்கன்றுகளை வனத்துறை சார்பில் வழங்கினர். மேலும் காடு வளர்ப்பு மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பாடலுக்கு பள்ளி மாணவ மாணவிகள் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Next Story