வேலூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கள்.
Paramathi Velur King 24x7 |6 Sep 2024 11:23 AM GMT
பரமத்தி வேலூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,செப்.06: நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தூய்மை மற்றும் துப்புரவுப் பணிகளுக்கு போதுமான உபகரணங்கள் இல்லாத்தால் உபகரணங்களை வழங்க வேண்டியும்,பழுதடைந்துள்ள குப்பை சேகரிக்கும் வண்டிகளை பழுதை நீக்கி கொடுக்க வேண்டியும் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று பழுதாக இருந்த 29 குப்பை சேகரிக்கும் தள்ளு வண்டிகள் முறையாக பழுது நீக்கியும், பேட்டரியால் இயங்கும் மூன்று குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டது. மேலும் ஒரு லாரி, ஒரு டிராக்டர் சரி செய்யப்பட்டு முறையாக சாலை வரி கட்டப்பட்டு, காப்பீடு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் தூய்மை பணிக்கு தேவையான வீதி கூட்டும் விளக்கமாறு. மண்வெட்டி, சாக்கடை சுத்தம் செய்யும் உபகரணங்கள், குப்பை சேகரிக்கும் கூடைகள் மற்றும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சோமசுந்தரம் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி தூய்மை பணியாளர்களுக்கான உபகரணங்களை வழங்கினார். அப்போது சோமசுந்தரம் அவர் கூறும்போது:- பரமத்திவேலூர் பேரூராட்சியில் கடந்த ஒரு மாதத்தில் பொது சுகாதாரம், தூய்மைப் பணிகள் மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர்,சாக்கடை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேரூராட்சியில் சேகரிக்கப்படும். குப்பை கழிவுகளை குப்பை கிடங்கில் தரம் பிரித்து முறையாக அப்புறப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் மக்கள் குப்பைகளின் தரத்தை பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிடும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று பயன்படுத்த முடியாத இருந்த குப்பை சேகரிக்கும் கையுந்து வண்டிகள் 29 பேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மூன்றும் முறையாக பழுது நீக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குப்பை சேகரிக்கும் டிப்பருடன் கூடிய டிராக்டர்கள் குப்பை சேகரிக்கும் லாரி உள்ளிட்டவைகள் முழுமையாக பழுது நீக்கம் செய்யப்பட்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் தகுதி சான்று மற்றும் வாகன காப்பீடுகள் பெறப்பட்டும் முழு தகுதி சான்றுகளுடன் பேரூராட்சி தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சியில் அடிப்படையில் ஒப்பந்த,தற்காலிக பணியாளர்கள் 25 பேர் நியமிக்கப்பட்டு அவர்களும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்டுள்ள மரபு குப்பை கழிவுகளையும் பயோ மைக் ரேசிங் முறையில் அழிக்கவும், தற்போது சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை,மக்காத குப்பை பிளாஸ்டிக் கழிவுகள் கண்ணாடி கழிவுகள் எனத் தரம் பிரிக்கப்பட்டு அவற்றை இன்சுலேடிவ் முறையில் அழிக்கவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story