குள்ளாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பங்கேற்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கொசூரில் குள்ளாயி அம்மன், விநாயகர், பாம்பலம்மன், கருப்பணசுவாமி ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவில் உள்ளது. தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைடுத்து இன்று கும்பாபிஷேக விழாவிற்கு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி பூஜை, லட்ச்சார்ஜனை, நாடி சந்தனம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட இரண்டு காலையாக வேள்வி பூஜைகளை செய்தனர். இன்று காலை இரண்டாம் காலை ஆக வேண்டி பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரினை கலசத்திற்கு உற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. கொசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பல்லாயிரகணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Next Story