பெரியகாப்பான்குளம் கரந்தை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது

பெரியகாப்பான்குளம் கரந்தை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது
8 ந் தேதி கும்பாபிஷேகம்
விருத்தாசலம், செப்.7- விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தில் கரந்தை அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு நாளை 8 ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று 6 ந் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை, சங்கல்பம், விநாயகர் பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, தன பூஜையுடன் கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள் தொடங்கி இரவு 7 மணிக்கு மேல் முதல் கால பூஜை ஹோமமும், மகாதீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று 7 ந் தேதி விசேஷ சாந்தி, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகளும் நடைபெற உள்ளது. நாளை 8 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் மகமாயி அம்மன் கும்பாபிஷேகமும் 7.45 மணிக்கு ஸ்ரீ பிடாரியம்மன் கும்பாபிஷேகமும், காலை 8 மணிக்கு விமான கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகமும், காலை 8.15 மணிக்கு மூலவர் ஸ்ரீ கரந்தை அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் மகாதீபாரணைகளும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கோவிந்தசாமி, அறங்காவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story