ஆரணி அருகே அத்தியூரில் விநாயகர் கோயில், வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா
ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அத்தியூர் கிராமத்தில் விநாயகர் கோயில் மற்றும் பஜனை கோயில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி காலையில் யாகசாலை அமைத்து கணபதி பூஜை, கோபூஜை, தம்பதி சங்கல்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கோபுர கலசங்கள் மற்றும் மூலவர்கள் மீது புனித கலசநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி தங்கராஜ் தலைமையில் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
Next Story




