பரவலூர் ராயப்பர் கோவிலில் படுகளம் திருவிழா

பரவலூர் ராயப்பர் கோவிலில் படுகளம் திருவிழா
பக்தர்கள் படுத்து பூசாரிகளிடம் மிதி வாங்கி நேர்த்திக் கடன்
விருத்தாசலம் அடுத்த பரவலூர் ராயப்பர் கோவிலில் ஆண்டு தோறும் படுகளம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 23-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்றுவந்தது. விழாவின் சிகர  நிகழ்ச்சியான படுகளம் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ராயப்பர் சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், சந்தனம் உள் ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபி ஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பரவலூர் மணி முத்தாற்றில் இருந்து சக்தி கரகம், தீச்சட்டி எடுத்து வர உற் சவ மூர்த்திகள் கோவிலை சுற்றிலும் 3 முறை வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் கோவிலை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள படுகளத்தில் பக்தர்கள் படுத்து கொண்டனர். தொடர்ந்து கரகம் ஏந்தி வந்த வர்கள் படுத்திருந்த பக்தர்கள் மீது நடந்து சென்றனர். இவ் வாறு படுகளத்தில் பக்தர்கள் மீது கரகம் ஏந்தி வந்தவர்கள் நடந்து சென்றால், பூசாரிகள் மிதித்து சென்றால் நன்மை விளையும் என்பது ஐதீகம். பின்னர் கரகம் ஏந்தி சென்ற வர்கள் கோவிலுக்குள் செல்ல சாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story