டாக்டர் காருக்குள் புகுந்த பாம்பு !நாமக்கல்லில் பரபரப்பு!
Namakkal King 24x7 |6 Sep 2024 2:04 PM GMT
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தேடியும் பாம்பை பிடிக்க முடியவில்லை. இதனால் தியேட்டர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்–சேலம் சாலையில் உள்ள கே.எஸ் தியேட்டர் முன் நிறுத்தி இருந்த காரை டிரைவர் எடுக்க முற்பட்டபோது, அவரது தோளில் ஏதோ உறுவது போன்று தெரியவந்தது. திடீரென பார்த்தபோது சிறிய வடிவிலான பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தட்டி விட்டார். காருக்குள்ளேயே பாம்பு பதுங்கி கொண்டதால், கார் டிரைவர், டாக்டர் குடும்பத்தினர் அவசரமாக வெளியேறினர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காருக்குள் பதுங்கி இருந்த பாம்பை தேடினர். ஆனால் பாம்பு வெளியே வரவில்லை. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தேடியும் பாம்பை பிடிக்க முடியவில்லை. இதனால் தியேட்டர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த காரின் உரிமையாளர் தீயணைப்பு வீரர் துணையுடன் காரை எடுத்துக்கொண்டு கார் சர்வீஸ் சென்டருக்கு சென்று தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். பின்னர் அந்த பாம்பு அங்கிருந்து தப்பி சென்றது.
Next Story