அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு விழா மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
Maduranthakam King 24x7 |6 Sep 2024 2:23 PM GMT
சித்தாமூர் ஒன்றியத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு விழா மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாங்களத்தூர், புத்திரன்கோட்டை, பொலம்பாக்கம் ஆகிய பகுதிகளில் விவசாயின் நலன் கருதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர் சிற்றரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் மு.பாபு அவர்கள் கலந்து கொண்டு புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொலம்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, சோத்துப்பாக்கம் அரசினர் மேல்நிலை ஆகிய இரண்டு பள்ளிகளில் பள்ளி படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் வழங்கப்பட்டது இதனை செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
Next Story