சங்ககிரி செல்லாண்டியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திரளான பக்தர்கள் தரிசனம்....
Sangagiri King 24x7 |6 Sep 2024 3:33 PM GMT
சங்ககிரி சந்தைபேட்டை செல்லாண்டியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திரளான பக்தர்கள் தரிசனம்....
சேலம் மாவட்டம், சங்ககிரி, சந்தைபேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஆகஸ்ட் 23ம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் வைபவத்துடன் தொடங்கியது. அதனையடுத்து செப்.3 ஆம் தேதி கிராம சாந்தியும், செப்.4 ஆம் தேதி கணபதி பூஜையும், பாவனி கூடுதுறைக்கு சென்று பக்தர்கள் காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வருதலும் பின்னர் நான்கு கால கட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்று வெள்ளிக்கிழமை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.. இதனையடுத்து ஸ்ரீ செல்லாண்டியம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டு சென்றனர். விழாகுழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story