உடுமலையில் பட்டப் பகலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

காவல்துறையினர் தீவிர விசாரணை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போடிபட்டி காமராஜர் நகரில் செந்தில்குமார் குடும்பத்துடன் வசித்து வருகின்றார் இந்த நிலையில் செந்தில்குமார் மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் இந்த நிலையில் இவரது மனைவி கலைச்செல்வி தனது தம்பி சதீஷ்குமார் இடம் தெரிவித்துள்ளார் இதைத் தொடர்ந்து சதீஷ்குமார் இன்று செந்தில்குமாரிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அருகில் இருந்த அறிவாளை செந்தில்குமார் எடுத்து சதீஷ்குமாரின் கழுத்தில் வெட்டினர் இதில் சதீஷ்குமார் படுகாயம் அடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பட்டப்பகலில் நடந்த சம்பவம் உடுமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story