விருத்தாசலத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளி போதையில் அலப்பறையில் ஈடுபட்டதால் பரபரப்பு
Virudhachalam King 24x7 |6 Sep 2024 5:25 PM GMT
தர்ம அடி கொடுத்து போலீசார் கைது செய்தனர்
விருத்தாசலம் அடுத்த கார்குடல் நடுத்தெரு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் பிரபாகரன் (வயது 44) இவர் கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான செந்தில்குமார் மகன் ஆகாஷ் ( 23), என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போதையில் இருந்த ஆகாஷ் திடீரென பிரபாகரனை தான் கையில் வைத்திருந்த பிளேடால் கிழித்து விட்டார். இதில் காயமடைந்த பிரபாகரன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து பிரபாகரன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந் நிலையில் போலீசார் ஆகாஷை வலை வீசி தேடி வந்தனர். ஆகாஷ் திருப்பூரில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆகாஷ் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்பு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ஆகாஷை சென்று பிடிக்க முயன்றனர். அப்போது ஆகாஷ் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். உடன் போலீசார் ஆகாஷை வளைத்து பிடித்தனர். அப்போது 2 போலீசார் மட்டுமே இருந்ததால் போதையில் இருந்த ஆகாஷ் அவர்களிடம் திமிரி கொண்டிருந்தார். விருத்தாசலம் சன்னதி வீதியில் கோவிலுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் இச்ச சம்பவத்தை பார்த்து கோவிலுக்கு முன்பு ஒன்று திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த போலீஸ் வாகனத்திற்கு ஆகாஷை போலீசார் தூக்கி சென்றனர். அப்போது ஆகாஷ் அங்கிருந்த ஒரு மோட்டார் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். அப்போது போலீசார் அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருத்தாசலத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளி போதையில் அலப்பறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுடன், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story