விருத்தாசலம் அருகே அனுமதியின்றி மது பாட்டில் விற்ற பெண் கைது

விருத்தாசலம் அருகே அனுமதியின்றி மது பாட்டில் விற்ற பெண் கைது
26 மது பாட்டில்கள் பறிமுதல்
விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் பகுதியில் அரசு அனுமதி இன்றி திருட்டுத்தனமாக மதுபாட்டில் விற்கப்படுவதாக விருத்தாசலம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மனைவி ராணி (39) என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்து வந்ததை கையும் களவுமாக பிடித்து கைது செய்ததுடன் அவரிடம் இருந்த 26 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story