வைகை ஆற்றில் விநாயகர் சதுர்த்தி சிலைகளை கரைக்கும் பணியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்

வைகை ஆற்றில் விநாயகர் சதுர்த்தி சிலைகளை கரைக்கும் பணியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்
மாநகர காவல் ஆணையர் மாநகராட்சி ஆணையாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு
மதுரை மாநகரத்தில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நிறைவாக சிலைகள் கரைக்கும் பகுதியான வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள பேச்சியம்மன் படித்துறை பகுதிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து காவல் ஆணையர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர்களுடன் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள் வடக்கு,தெற்கு ஆகியோர் தலைமையில் காவல் துறையினரின் கொடி அணி வகுப்பு கீழமாசி வீதி விளக்குத்தூண் காவல் நிலையத்திலிருந்து ஆரம்பித்து தெற்கு மாசி,கீழமாசி வீதி சந்திப்பில் உள்ள லெமன் மார்க்கெட் வரை நடைபெற்றது.இந்த நிகழ்வில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story