பாலமேடு அருகே ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் புரவி எடுப்பு உற்சவ விழா -
Sholavandan King 24x7 |7 Sep 2024 12:57 AM GMT
35 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலமாக நடைபெற்றது.
பாலமேடு அருகே ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் புரவி எடுப்பு உற்சவ விழா - 35 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் பாலமேடு அருகே இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, பெரியகுளம், மாணிக்கம்பட்டி ஆகிய ஐந்து ஊர் கிராம பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட ஶ்ரீஅய்யனார் சுவாமி குதிரை எடுப்பு உற்சவ விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த உற்சவ விழாவில் பூசாரி சுவாமி ஆட்டத்துடன் பழக்கூடை மேளதாளம் முழங்க ஊர்வலமாக வெ.பெரியகுளம் சுவாமி கண் திறக்கும் இடத்திற்கு வந்தனர். பின்னர் சுவாமிக்கு கண் திறந்து வானவேடிக்கை முழங்க சக்தி கிடாய் வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஐந்து ஊர் சார்பில் அய்யனார், கருப்பசாமி, சின்னகருப்புசாமி, கன்னிமார், தங்கச்சி அம்மன், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமிகள், குதிரைகள், அய்யனார் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றடைந்து பொங்கல் வைத்து கிடாய் வெட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, ஐந்து ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கடந்த 35 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த திருவிழாவில் ஐந்து ஊர் கிராம மக்கள் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story