முடுவார்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.
Sholavandan King 24x7 |7 Sep 2024 12:58 AM GMT
இதற்கான ஏற்பாடுகளை தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை இளைஞர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
முடுவார்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா. மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தேவேந்திர குல வேளாளர் உரைமுறைக்கு தனித்து பாத்தியப்பட்ட ஶ்ரீ காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், மகா பூர்ணகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை இளைஞர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story