இந்து முன்னணி ஒன்றிய தலைவர் இல்ல திருமண விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
Sholavandan King 24x7 |7 Sep 2024 12:59 AM GMT
அனைத்து மதத்தை போலவே இந்து சமுதாய பண்டிகையை கொண்டாட அரசு தடை விதிக்க கூடாது.
இந்து முன்னணி ஒன்றிய தலைவர் இல்ல திருமண விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 15.பி.மேட்டுப்பட்டி ராஜேஷ் நகரில் உள்ள அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஒன்றிய தலைவர் சுரேந்தர் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட துணை தலைவர் குணசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து இளைஞர் முன்னணி ஆறுமுகம், வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் மாநில செயலாளர். மத்திய அரசு வழக்கறிஞர் முத்துக்குமார் ஜி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரவணக்குமார் ஜி இந்து முன்னணி மாநில பொது செயளாலர் முருகானந்தம் கலந்துகொண்டு கூறுகையில். தமிழகம் முழுவதும் இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பாக கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா, மற்றும் இந்து எழுச்சி ஊர்வலம் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இதுவரை எந்தவித பிரச்சனையும் நடைபெற்றது இல்லை. ஆனால் தற்போது அரசு கெடுபிடி செய்கிறது. இந்துக்கள் பண்டிகைக்கு மட்டும் அரசு ஏன் தடை போடுகிறது. பண்டிகை கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கிறது. இந்துக்களின் கடவுள் விநாயகர் விழாவை கொண்டாட அரசு தடை விதிக்க கூடாது. பெரும்பான்மை உள்ள இந்து சமுதாயத்தை தமிழக அரசு வஞ்சிக்க நினைக்கிறது. மதச்சார்பற்ற நாடு என கூறி இந்துக்கள் பண்டிகையை மட்டும் கொண்டாட கட்டுப்பாடு விதிப்பது ஏன். அனைத்து மதத்தை போலவே இந்து சமுதாய பண்டிகையை கொண்டாட அரசு தடை விதிக்க கூடாது. இந்து முன்னணி கடும் கண்டனத்து தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Next Story