பாலமேடு அருகே ஶ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
Sholavandan King 24x7 |7 Sep 2024 1:00 AM GMT
இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே 66.மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, எஜமானர் அழைப்பு, சுதர்சன பூஜை, சுமங்கலி பூஜை, மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையுடன் யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து வானத்தில் கருடன் வட்டமிட புனித நீர் ஊற்றப்பட்டு விமான கலசம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story