பூவலூர் வடவயல் பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடம்!

பூவலூர் வடவயல் பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடம்!
பொதுப்பிரச்சனைகள்
ஆவுடையார் கோவில் அருகே உள்ள பூவலூர் வடவயல் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் தற்போது எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்று அப்பகுதியில் உள்ள மக்கள் கவலைப்படுகின்றனர். இது சம்பந்தமாக அந்த கிராமத்து மக்கள் பலமுறை அனைத்து அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
Next Story