குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
கொடைக்கானல் பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவது வழக்கம். கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, பாம்பார் நீர்வீழ்ச்சி போன்ற எட்டு பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியரும் செல்லும் வாகனமும் ஆம்புலன்ஸ் பயன்படுத்துவதற்கு கூட ஏற்றவாறு இல்லை. மழை காலங்களில் குழிகள் இருப்பது தெரியாமல் இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாகிறார்கள். இதுபோன்ற சாலை செய்திகளை பகிர்ந்த பிறகு கொடைக்கானல் நெடுஞ்சாலை துறை கண் துடிப்பிற்காக அவ்வப்போது பொய் வேசத்திற்காகவும் அரசு பணத்தை வீண் செலவு செய்யும் அதிகாரிகளும் அவ்வப்போது இதுபோன்ற கண் துடைப்பிற்காக தரமே இல்லாமல் குன்டும் குளி மட்டும் மேலோட்டமாக சரி செய்யப்படுகிறது. இச்சாலை மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குல் மறுபடியும் குண்டும் குழியுமாய் மாறுகின்றது அரசின் பணத்தை வீண் வினியோகம் செய்யும் அரசு அதிகாரிகளை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனால் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் கவனத்தில் கொண்டு தரம் உள்ளவாறு சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பது மக்களுடைய கோரிக்கையாக உள்ளது.
Next Story