நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Palladam King 24x7 |7 Sep 2024 4:38 AM GMT
செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு
பல்லடத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காளம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது கேட்டை நட்சத்திரத்திற்கு பரிகார ஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அங்காளம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் திருப்பூர் ஈரோடு கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது
Next Story