இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
துவக்கம்
திருக்கோவிலூரில் 14 வது வார்டு கவுன்சிலர் பூபதி ஏற்பாட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 14 வது வார்டு கவுன்சிலர் பூபதி ஏற்பாட்டில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரூராட்சி திடலில் நடந்தது. மாவட்டச் செயலாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். நகர மன்ற சேர்மன் முருகன், ஒன்றிய செயலாளர் தங்கம், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர மன்ற துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி குணா முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர் பூபதி அனைவரையும் வரவேற்றார். அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றி, ஏழை எளிய மக்களுக்கு அயன்பாக்ஸ், தையல் இயந்திரம், இளைஞர்களுக்கு விளையாட்டு சாதனங்கள் என ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், விஸ்வநாதன், பிரபு, பிரேமா அல்போன்ஸ், அரகண்டநல்லூர் பேரூராட்சி சேர்மன் அன்பு, நகர மன்ற கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story