மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொலை செய்த கணவன் பீகாரில் கைது.
Karur King 24x7 |7 Sep 2024 5:20 AM GMT
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொலை செய்த கணவன் பீகாரில் கைது.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொலை செய்த கணவன் பீகாரில் கைது. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, புகலூரில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புக்கர் மாஜி வயது 30-. இவரது மனைவி சன்மதி தேவி வயது 28 ஆகிய இருவரும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் மனைவி சன்மதி தேவிக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த புக்கர் மாஜி ஆத்திரம் அடைந்ததோடு கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி சன்மதி தேவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பாக வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து புக்கர் மாஜியை தேடி வந்தனர். விசாரணையில் சொந்த மாநிலமான பீகாரில் புக்கர் மாஜி தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து, பீகார் மாநிலம், தாரம்பூருக்கு சென்று தலைமறைவாக இருந்த புக்கர் மாஜி-யை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நேற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story